பாகிஸ்தான் கராச்சி மைதானத்தில் மீண்டும் வருகிற 20 மற்றும் 21ம் தேதிகளில் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு பகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானில் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப் பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், அந்நாட்டு அரசும் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக உலக லெவன் அணிக்கும், பாகிஸ்தான் லெவன் அணிக்கும் இடையே இரண்டு டி-20 போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விறு போட்டிகளும் வருகிற 20 மற்றும் 21ம் திகதிகளில் நடைபெறுகிறது.
உலக லெவன் அணிக்கு இலங்கையின் சனத் ஜெயசூர்யாவும், பாகிஸ்தான் லெவன் அணிக்கு அப்ரிடியும் அணித் தலைவர்களாக இருப்பர்.
வீரர்கள் விவரம் வருமாறு:
உலக லெவன்:
சனத் ஜெயசூர்யா (அணித்தலைவர்), ரிக்கார்டோ போவல், ஸ்டீவன் டெய்லர், ஜேர்மைன் லாசன், ஆடம் சான்ஃபோர்ட் (மேற்கிந்திய தீவுகள்), ஜஸ்டின் கெம்ப்,லூட்ஸ் போஸ்மன், ஆண்ட்ரே நெல், ஆண்ட்ரே சீமோர், நண்டி ஹய்வர்து (தென் ஆப்ரிக்கா), ஷபூர் ஷட்ரான், முகமது ஷாசட்(ஆப்கானிஸ்தான்).
பாகிஸ்தான் லெவன்:
ஷாகித் அப்ரிடி (அணித்தலைவர்), யூனிஸ் கான், நசீர் ஜாம்ஷெட், அசத் ஷாபிக், ஷாகிப் ஹசன், காலித் லத்தீப், உமர் அக்மல், பாவத் ஆலம், சோயிப் மாலிக், உமர் குல், முகமது சமி, வகாப் ரியாஸ், ஷர்ப்ரஸ் அகமது (விக்கெட் கீப்பர்), இம்ரான் நசீர்.
