திஹாரிய அல்- அஸ்ஹர் மாணவனுக்கு நான்கு விருதுகள் .


நான்காவது  தேசிய பாடசாலைகளுக்கிடையிலான தகவல் தொழில்நுட்ப விருது  வழங்கும் நிகழ்வு இன்று மாலை கொழும்பு 5 இல் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜெயந்தி மந்திர கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் திஹாரிய அல்- அஸ்ஹர் மத்திய கல்லூரி உயர்தர வர்த்தகப்  பிரிவில் கல்விகற்கும் மாணவன் எம். என். எம். நாதில் ஹசன் நான்கு விருதிகளைப் பெற்றுகொண்டார். இது போன்ற ஒரு தேசிய தகவல் தொழில்நுட்ப போட்டியில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டது, பாடசாலை வரலாற்றில் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பங்குபற்றிய பிரிவும் பெற்றுக்கொண்ட இடங்களும்
Junior Category Government Schools for the 11th Young Computer Scientist 
Competition 2012 - Western Province 
1st Place

Junior Category Government Schools for the 11th Young Computer Scientist 
Competition 2012 - All Island wide
2nd Place - (Silver Award)

23rd National School Software Competition - NSSC-2012
2nd Place - (Silver Award)

அத்துடன் எதிர்வரும் அக்டோபர் 26  ஆம் 28 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் "SEARCC சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான மென்பொருள் போட்டி 2012 "  யிற்கு தெரிவாகியுள்ளார்.

இன்றைய  இந்த விருது வழங்கும் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.



மாணவன் எம். என். எம். நாதில் ஹசன்  அவர்கள் தொடர்ந்தும் இது போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றி உலகளாவிய ரீதியில் பல விருதுகளைப் பெற்று சாதனைகள் படைக்க வேண்டும் என்று திஹாரிய நியூஸ் இணையத்தளம் வாழ்த்துகிறது.

1 Comments

  1. Masha Allah... Congratulations and wish him all the very best for his future achievements too. May almighty give him the best of Eeman and the best of knowledge and make him a victorius person.

    ReplyDelete
Previous Post Next Post