இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டில் பெரும்பான்மையினராக மாறி விரைவில் ஷரிஆ சட்டம் அமுலுக்கு வரும் நாள் தூரத்தில்லையென பௌத்த பதுகாப்பு மன்றம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாணந்துறையில் இந்த அமைப்பு விநியோகித்த துண்டுப்பிரசுரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம்கள் பௌத்த மரபுரிமைகளை அழித்து வருகின்றனர். இதனால் சிங்கள இனம் அழிந்து வருகிறது. இலங்கையில் முஸ்லிம் தீவிரப்போக்கு வளர்ந்து வருகிறது. பௌத்த புனித பூமிகளை முஸ்லிம்கள் கொள்ளையடித்து வருகிறார்கள்.
இலங்கையின் வர்த்தக செயற்பாட்டில் 80 சதவீத பங்கிளை முஸ்லிம்கள் கொண்டுள்ளனர். முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்காது சிங்களவர்களின் கடைகளில் மாத்திரம் பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும். அப்பாவி சிங்களவர்கள் கஸ்டப்பட்டு உழைக்கும் பணம் முஸ்லிம்களை சென்றடைகிறது.
பொருளாதார துறையில் வளர்நதுவரும் முஸ்லிம்கள் இந்நாட்டில் பெரும்பான்மையினராகி ஷரீஆ சட்டம் அமுல் நடாத்தப்படலாம். அப்போது அவர்கள் எங்கள் சந்தியினரின் தலைகளை வெட்டுவார்கள். பகிரங்கமாக தூக்கிலிட்டுக்கொள்வார்கள். எங்கள் பரம்பரைக்கு உயர் பதவிகள் வழங்கப்படமாட்டாது.
முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் சிங்களப் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வர்தக நிலையங்களின் முஸ்லிம் மனேஜர்கள் சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி, இறுதியில் சிங்களப் பெண்கள் முஸ்லிம்களின் மனைவிகளாகி விடுகின்றனர்.
எமது நீண்டகால வரலாறு விரைவில் மாற்றம் பெற்றுவிடலாம். இது முஸ்லிம் நாடு என்பார்கள். அப்போது சிங்களவர்கள் கடலுக்குள்தான் குதிக்க வேண்டும். இதனால் சிங்களவர்கள் தமது இனத்தின் எதிர்கால நன்மைக்காக சிந்தனையுடன் செயற்படவேண்டும்.
அதிக குழந்தைகளை பராமரிக்க பொருளாதார வசதி இல்லையென்று சிங்களவர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்க முடியாது. எமது இனத்தை விருத்தி செய்துகொள்ள வேண்டும். சிங்கள சனத்தொகையை அதிகரிக்க உதவ வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
