பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வரும் 15 வயதுப் பெண் மலாலா யூசுப்ஸாய், தற்போது குணமடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர் மகிழ்ச்சியாக உள்ளார், எழுந்து நடக்க முயற்சி செய்கிறார். சிகிச்சைக்கு எங்களுக்குத் தேவையான தகவல்களைத் தந்து ஒத்துழைக்கிறார் என்றார் பெர்மிங்காமின் ராணி எலிசபெத் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் டேவ் ரோஸர் கூறியுள்ளார்.
மலாலா யூசுப்ஸாய் சுடப்பட்ட வாகனம்
Tags
உலகச் செய்திகள்






