இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்குமான ஓர் வேண்டுகோள்


எதிர்வரும் 04 ம் திகதி எமது தாய் நாடான இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது T20  உலககிண்ண அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி ஓர் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை. உங்களது ஆதரவை நீங்கள் எந்த அணியின் மீது காட்டினாலும் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம். 


"முஸ்லிம் சமூகம் மீது சில பேரின சக்திகள் பிரச்சினை ஒன்றை மூட்டி விடுவதுற்கு சந்தர்பத்தை எதிர் பார்த்துக்க் கொண்டிருக்கும் வேலையில் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பவர்களாக நாம் இருந்து விடக்கூடாது. எனவே நாம் மிகவும் விழிப்புடன் இவ்விடயத்தில் நடந்து கொள்ள வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம் "

Post a Comment

Previous Post Next Post