அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் ""சண்டி""- நீரில் மிதக்கும் நியூயோர்க் - படங்கள்


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இறுதி சூறாவளிப் பிரசாரம் சூடுபிடித்திருந்த நிலையில் அதனை விஞ்சும் வகையில் 'சண்டி' சூறாவளி அமெரிக்காவை தாக்கியுள்ளதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

கரிபியன் கடலில் தோன்றிய, 'சண்டி' சூறாவளியினால் அமெரிக்காவின் நியூயார்க், வொஷிங்டன், நியூஜெர்சி, மன்ஹட்டன் உள்ளிட்ட 13 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க தனது வரலாற்றின் மிகப்பெரிய சூறாவளியைச் சந்தித்துள்ளது.


இந்த சூறாவளி காரணமாக 60 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளியால் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள நியூயோர்க் நகரம், சினிமாப் படமொன்றை ஒளிப்பதிவு செய்வதற்காக இயற்கை சீரழிவுகள் அடங்கிய காட்சிகளை காட்சியமைத்திருப்பது போல தென்படுவதாக வெளிநாட்டு செய்திகள் விபரித்துள்ளன. 

'சண்டி' சூறாவளி, அமெரிக்காவை நெருங்கி வந்துகொண்டிருந்த போது, நியூயோர்க் நகரிலிருந்து சுமார் 3 இலட்சத்து 70ஆயிரம் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த சூறாவளி, அமெரிக்காவின் வடகிழக்கு கரையோரத்தைச் சேர்ந்த நகரங்களான வொஷிங்டன், நியூயோர்க், பொஸ்டன் ஆகிய பெரிய நகரங்களையே நாசமாகிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த சூறாவளி காரணமாக அமெரிக்காவில் இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு,

•     6.5 மில்லியன் பொதுமக்கள் பாதிப்பு.

•    16 பேர் உயிரிழப்பு.

•    நியூயோர்க் உட்பட பல நகரங்கள் இருளில் மூழ்கின. 

•    13 அடி உயரத்துக்கு எழுந்த அலை. 

•    3 அடி உயரத்திற்கு வெள்ளம்.  

•    சேதம் 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பீடு. 

•    நியூயோர்க் நகருக்கு ஒரு வாரத்துக்கு மின்சாரம் கிடைக்காது. 

•    நிலக்கீழ் ரயில் சேவைகள் உட்பட போக்குவரத்து ஸ்தம்பிதம். 

•    14,000 விமான சேவைகள் ரத்து.

•    பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள், பொது நிறுவனங்கள் மூடப்பட்டன. 

•    11:11 தாக்குதலுக்குப் பின் முதன்முறையாக பங்குச்சந்தை மூடப்பட்டது. 

•    வைத்தியசாலைகளிலிருந்து நோயாளர்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர். 

•    19 தொழிலாளர்கள் எடிசன் மின் நிலையத்தினும் சிக்குண்டுள்ளனர். 

•    பிறீஸிபொயன்ட் என்னுமிடத்தில் தீப்பற்றி எரியும் 50 வீடுகளை
      பாதுகாக்க 170 தீயணைப்பாளர்கள் முயற்சி. 

•    அணுமின்நிலையம் ஆபத்துக்குள்ளாகலாம் என எச்சரிக்கை. 

•    தீ விபத்துக்குள்ளான வீடுகளிலிருந்து 70பேர் மீட்பு.

Post a Comment

Previous Post Next Post