திஹாரிய நெட்வேர்க் - புரட்சிப் பயணத்தில் இரு ஆண்டுகள் நிறைவு.....



திஹாரிய ஊடக வரலாற்றில் புதியதொரு புரட்சிப் பயணத்தை ஆரம்பித்த "திஹாரிய நெட்வேர்க்" இன்றுடன் தனது இரண்டாவது வெற்றிகரமான ஆண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் கால்பதிக்கிறது.

கடந்த இரு வருடங்களிற்கு முன்னர் ஊடகத்துறையில் உள்ள ஆர்வம் காரணமாக எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் பேஸ்புக்  சமூக வலைத்தளத்தின் ஊடக "திஹாரிய நியூஸ் 1st " என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட எமது முதலாவது சேவை இன்று  திஹாரி உட்பட உலகளாவிய ரீதியில் நடைபெறும் விசேட  நிகழ்வுகளை விரைவாக மக்களுக்கு வழங்கும் சேவையாகவும், ஊரில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பாக்கும்  தொழிநுட்ப வசதிகளைக் கொண்டியங்கும் செய்தி வழங்கும் இணையத்தளமாக  இயங்கி வருகின்றமை  குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்....

இரண்டாவது வருட நிறைவைக் கொண்டாடும் இத்தருணத்தில் எமது வெற்றியில் பிரதான பங்கு வகிக்கும் எமது வாசகர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் எமது வெற்றிக்கு கைகொடுக்கும் எமது நிருபர்கள், நண்பர்கள் மற்றும் பலவழிகளில் எமக்கு உதவிகளை வழங்கி எமக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் "திஹாரிய நெட்வேர்க்" ஊடக வலையமைப்பு சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம். 

நன்றி: திஹாரிய நியூஸ் ஆசிரியர்


"திஹாரிய நெட்வேர்க்" பற்றி மேலதிக தகவல்களுக்கு




Post a Comment

Previous Post Next Post