குர்பான் கடமையை தடையின்றி நிறைவேற்ற பொலிஸாரினால் புதிய சுற்று நிருபம்.


குர்பான் கடமைக்காக மாடு, ஆடுகளை ஏற்றிச் செல்வது தொடர்பில் பொலிஸார் சுற்று நிருபமொன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த சுற்று நிருபத்தில் குர்பான் கடமைக்காக மாடு,ஆடுகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் அதற்கான சட்டரீதியான ஆவணங்கள் இருப்பின் தாமதங்களை ஏற்படுத்தாது, வீதித் தடைகளிலிருந்து அவற்றை விடுவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

ஹஜ் குர்பான் தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதிவரை இந்த விதி அமுலில் இருக்குமெனவும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் காமினி நவரட் தனது கையொப்பத்துடன் வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் சுட்டிக் கட்டப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post