ஹஜ் பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் குர்பான் கடமையை இம்முறையும் தடையின்றி முன்னெடுக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க உள்ளதாகவும் ஆனால் சில அதிகாரிகள் இதற்கு இடையூறாக செயற்படுவதாகவும் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார். முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாள் எதிர்வரும் 26ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. ஹஜ் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து தான் ஜனாதிபதியை சந்தித்து எடுத்துக்கூற உள்ளதாகவும் அவர் கூறினார்
முன்னேஸ்வரம் கோவிலில் ஆடு பலிகொடுப்பது தொடர்பில் கடந்த தினங்களில் சிக்கல் ஏற்பட்டது. இதேபோன்று முஸ்லிம்களின் பாரம்பரிய கடமைகளில் ஒன்றான குர்பான் தொடர்பிலும் குழப்பம் ஏற்படும் என்ற அச்சம் காணப்படுவதாக பலர் என்னிடம் முறையிட்டு வருகின்றனர். இவை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச உள்ளேன். நாட்டின் எப்பாகத்திலாவது குர்பான் கடமையை நிறைவேற்ற தடங்கல் காணப்பட்டால் அது குறித்து தனக்கு அறிவிக்குமாறும் அலவி மெளலானா கோரியுள்ளார்.
நன்றி - தினகரன்
