அமெரிக்க பொருட்களின் ஹலால் சான்றிதழ்களை வாபஸ் பெறுமாறு தேசிய சுதந்திர முன்னணி கோரிக்கை


உலக முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமெரிக்காவினால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் ஒரேயொரு அமைப்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிடம் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.

தேசிய சுதந்நிர முன்னணி ஊடக பேச்சாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின்  தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தியிடம் இந்த எழுத்து மூல வேண்டுகோளை விடுத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளும் அமெரிக்காவினால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ஹலால் சான்றிதழ்களை வாபஸ் பெற வேண்டும்.

இதன் மூலம் அமெரிக்காவிற்கு எதிரான எமது எதிர்பினை வெளியிட முடியும். அத்துடன் அமெரிக்காவின் எந்தவொரு உற்பத்தி பொருளுக்கும் எதிர்காலத்தில் ஹலால் சான்றிதழ் வழங்காமல் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பையும் ஒற்றுமையையும் காட்ட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post