“தியத உயன” – இலங்கையில் புதிய கண்கவர் பிரதேசம் - படங்கள் இணைப்பு


பொருளாதார ரீதியில் துரித கதியில் அபிவிருத்தியடைந்து செல்லும் இலங்கையில், உல்லாசரப்பிரயாணிகளை கவரும் கண்கவர் பிரதேசமொன்று புதிதாக பத்தரமுல்லையில் திறந்துவைக்கப்பட்டது. “தியத உயன” என பெயரிடப்பட்டுள்ள இவ் அழகிய பிரதேசத்தில் உள்நாட்டு தாவரங்கள் மற்றும் வெப்பமண்டல பூத்தாவரங்கள், உள்நாட்டு கலைநுட்ப பொருட்கள் போன்றவற்றை விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் செய்ய முடியும். 





இங்கு மனதை மகிழ்வூட்டும், மனதிற்கு அமைதியளிக்கும் வகையில் அழகிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன, அத்துடன் அப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்கவர் நீரூற்று மேலும் அழகை சேர்க்கின்றது.



இதைத்தவிர இப்பிரதேசத்தில் பொழுதுபோக்குப் பூங்காவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மன மகிழ்வுடன் விளையாடக்கூடிய வகையில் இப்பூங்காவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பொருட்களை கொள்வனவு செய்யும்வரை, பிள்ளைகளை இங்கு விளையாடி மகிழ்கின்றனர்.



பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் மாலைவேளைகளில், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை உடற்பயிற்சி செய்யக் கூடிய வகையில் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.



“தியத உயன” நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்ட இயற்கையான அழகைக்கொண்டுள்ளது. இது உள்நாட்டவர்கள் உட்பட வெளி நாட்டவர்களையும் கவரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

Post a Comment

Previous Post Next Post