யூடியூப்பில் கடந்த சில மாதங்களாக வேகமாக சூடுபிடித்திருக்கும் "காங்னாம் ஸ்டையில்" (Gangnam Style) பாடல் வீடியோ யூடியூப்பில் அதிக 'Likes' பெற்ற பாடலாக புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது.
தென் கொரிய நாட்டு ராப் பாடகர் PSY என்பவர் உருவாக்கிய இந்த பாடல் வெளியான 3 மாதங்களில் யூடியூப்பில் 50 கோடி பேரை பார்க்கச் செய்திருக்கிறது.
ஆங்கிலத்துடன் கொரிய மொழியில் பாடல் வரிகள் இருந்தாலும் பெரும்பாலான மக்களை ஈர்த்தது இப்பாடலுக்கும் இவர் குதிரைப் போன்று ஆடும் நடன அசைவுகள்தான்.
கொரிய இசைத்துறையில் சாதரண பாடகரா இருந்த PSY இந்தப்பாடல் மூலம் அமெரிக்கா வரை மிகப்பிரபலபடுத்தியிருக்கிறது.
அதுமட்டுமல்லாது யூடியூப்பில் அதிகம் 'லைக்ஸ்' (இந்த பதிவு வரை 4,299,707 லைக்ஸ்) வாங்கியப்பாடலாக கின்னஸ் உலகச் சாதனைப்படைத்திருக்கிறது.
முன்னதாக யூடியூப்பில் LMFAO இன் Party Rock Anthem பாடல் (1,574,963) லைக்ஸ் உடன் முதலிடத்திலும்,
Gotye பாடல் இரண்டாவது இடத்திலும், Kony 2012, Justin Bieber இன் Baby பாடல் (1,327,147) லைக்ஸ் என்பன அடுத்தடுத்த இடத்திலும் இருந்தன.
ஆனால் தற்போது இவ்விரண்டையும் முறியடித்துள்ளதுடன், 3மாதங்களில் 50 கோடிபார்வையாளர் பார்வையிட்டுள்ளதாலும் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.
இந்தப்பாடலும் தற்போது பல்வேறு வெர்சன்களில் வெளியாகிப் பிரபலமாகிவருகிறது.
Tags
உலகச் செய்திகள்
