ஹஜ் பெருநாள் விடுமுறை மாற்றம் , ஹோட்டல் உரிமையாளர்கள் விசனம்


இவ்வருடத்திற்கான ஹஜ் பண்டிகை எதிர்வரும் 27ஆம் திகதி என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்ததன் பின்னர், 26ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்ட பொது விடுமுறைதினமானது 27ஆம் திகதிக்கு அரசினால் மாற்றப்பட்டது. இந்நிலையில் 26ஆம் திகதி விடுமுறை தினத்திற்காக பதிவுகளை மேற்கொண்ட ஹோட்டல் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்.,

26ஆம் திகதி விடுமுறை என்பதால் எமது வாடிக்கையாளர்கள் பலர் முன்பதிவுகளை அன்றைய தினம் எமது ஹோட்டல்களில் மேற்கொண்டிருந்தனர். ஆனால், விடுமுறை தினத்தை மாற்றியதால் எமது வாடிக்கையாளர்கள் தமது முன்பதிவுகளை ரத்து செய்கின்றார்கள். இல்லையேல் மறுதினத்திற்கு பதிவினை கேட்கிறார்கள். மறுதினம் அதாவது 27ஆம் திகதி ஏற்கனவே வேறு வாடிக்கையாளர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளதால் அதுவும் சிக்கலாக இருக்கிறது. இந்நிலையில் எமது வாடிக்கையாளர்களில் பலர் தமது 26ஆம் திகதி பதிவுகளை ரத்து செய்துள்ளனர். இவ்விடயத்தினால் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டார்கள்.

Post a Comment

Previous Post Next Post