பிரிட்டனில் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள். சென்ற வருடம், பிரபல "டைம்ஸ் ஒன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் யுவதிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது. அதில் பின்வரும் தகவல்களைக் கூறுகின்றது டைம்ஸ் ஒன்லைன். பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது.
லண்டன் மத்திய பள்ளிவாயலில் இஸ்லாத்தை தழுவும் மூவரில் இருவர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதுக்கும் குறைந்தவர்கள்.
இருவது தொடக்கம் முப்பது வயதுவரையுள்ள படித்த பிரிட்டன் யுவதிகள் இஸ்லாத்தை தழுவுவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று (Kevin Brice , Centre for Migration Policy Research , Swansea University ) கூறியுள்ளது.
இந்த கட்டுரையில் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாகக் ஏற்றுகொண்ட 5 பிரிட்டன் சகோதரிகளின் கருத்துக்களையும் டைம்ஸ் ஒன்லைன் வெளியிட்டுள்ளது.
Tags
உலகச் செய்திகள்

Alhamthulillah
ReplyDelete