வத்தல தேர்தல் தொகுதியின் அபிவிருத்திச் சங்க தலைவராக உபேக்ஷா சுவர்ணமாலி!


பிரபல நடிகையும், பாரளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா சுவர்ணமாலி (Paba ) அவர்களுக்கு வத்தல தேர்தல் தொகுதியின் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் பதவி கடந்த மாதம் பொருளாதார அபிவிலுத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச அவர்கள் வழங்கி வைத்ததைத் தொடர்ந்து கடந்த   அக்டோபர் 22 ஆம் திகதி தனது பதவியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். கடந்த 20 வருடங்களிற்கு பிறகு ஒரு பெண்  வத்தல தேர்தல் தொகுதியின்  அபிவிருத்திச் சங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன் நிகழ்வு வத்தல பிரதேச சபை கேட்போர்கூட மண்டபத்தில் நடைபெற்றது. இப் பதவி ஏற்பு விழாவிற்கு வத்தல தேர்தல் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் கைத்தொழில் பிரதி அமைச்சருமான நீல் ரூபசிங்க மற்றும் மேல்மாகாண அமைச்சர் நிமல் லன்ஸா, மாகாணசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். 



அதனைத் தொடர்ந்து "திவி நெகும" திட்டத்தின் நான்காவது கட்ட ஆரம்ப நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டு பயிர் விதைகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது. 


அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் பட்டதாரி பயிலுனர் பட்டம் பெற்றரவர்களுட்கு நிரந்தர நியமனம் பாரளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி  அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்விற்க்கு  பாரளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி அவர்களின் செயலார் பிரதீப் மற்றும் ஊடக செயலாளர் கஹடோவிட சுஹைல் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பாரளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி  அவர்களின் தாய் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post