வாடகைச் சேவையில் ஈடுபடும் ஆட்டோக்கள் மீற்றர்கள் பொருத்துவது கட்டாயமாகிறது.


நாடெங்கிலும் வாடகைச் சேவையில் ஈடுபடும் சகல முச்சக்கர வண்டிகளுக்கும் மீற்றர்கள் பொருத்தப்படுவதைக் கட்டாயமாக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. வாடகைச் சேவையில் ஈடுபடும்  சகல முச்சக்கர வண்டிகளுக்கும் உடனடியாக   அமுலுக்கு வரும் வகையில் மீற்றர்களை பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளரென மோட்டார் போக்கு வரத்து திணைக்கள ஆணையாளர் எல்.எச். ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக மோட்டார் போக்குவரத்து சட்ட மூலத்தில் விசேட திருத்தம் ஒன்றையும் அறிமுகம் செய்திட உள்ளதாகவும்,  அதை நடைமுறைப்படுத்திட அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் நாடளாவிய ரீதியில் சுமார் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் வாடகை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.


Post a Comment

Previous Post Next Post