"எது அதிசயம்?" என்ற தலைப்பில் பேஸ்புக் இல் வந்த ஆக்கம் ஒன்றை உங்களுக்காக வழங்குகிறோம்.
அல்லாஹ்வின் பெயர் தக்காளியில் உள்ளது அதிசயமா?
அல்லாஹ்வின் பெயர் கிழங்கில் உள்ளது அதிசயமா?
அல்லாஹ்வின் பெயர் மீனில் உள்ளது அதிசயமா?
அல்லாஹ்வின் பெயர் உடல் உறுப்புக்களில் உள்ளது அதிசயமா?
அல்லாஹ்வின் பெயர் மரங்களில் இருப்பது அதிசயமா?
அல்லாஹ்வின் பெயர் வானத்தில் உள்ளது அதிசயமா?
அப்படி என்றால் இதற்கு என்ன சொல்லுவது?
இலவசமாக காற்று நமக்கு கிடைக்கிறதே, தாயைப் பார்த்து குழந்தை சிரிக்கிறதே, வானத்தில் பயணிக்கிறீர்களே, எழுதுகோல் உதவியின்றி டைப் செய்கிறீர்களே, ஏன் நமது அல்குர்ஆன் இது அதிசயம் இல்லையா? ஏன் இதை அதிசயம் என்று பேசுவதில்லை. இது மட்டும்தானா.. அல்லாஹ் நிகழ்த்தும் அதிசயங்களை எழுத்தால் கூறஇயலாது அந்த அளவுக்கு எல்லாமே அதிசயம்தான்! எனவே அல்லாஹ்வை எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டுமோ அவ்வாறு கண்ணியப்படுத்துங்கள்!
தக்காளியில் அல்லாஹ், கிழங்கில் அல்லாஹ், மீனில் அல்லாஹ், வானத்தில் அல்லாஹ், மசூதியின் பறக்கும் மேற்கூரை ஆகியவற்றை பார்த்துத்தான் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டுமா?
குர்ஆனை பார்த்து, படித்துத்தான் ஒருவன் இறைநம்பிக்கையை முறையாக வளர்த்துக்கொள்ள இயலும் ஏனெனில் அல்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்! இதை நபிகளார் (ஸல்) அவர்களின் வாயிலாக அறிந்துக்கொள்ளுங்கள்!
ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்: புஹாரி, முஸ்லிம்
Tags
கட்டுரைகள்

Alhamthulillah, this is an eye opener
ReplyDelete