இலங்கையில் தீவிரவாத முஸ்லிம் போக்கு – ஒப்பாரி வைக்கிறார் சம்பிக்க ரணவக்க


தீவிரவாத முஸ்லிம் போக்குக்கு இலங்கை கீழ்படிந்துவிடும் அபாயம் இருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜாதிக்கஹெல உறுமய கூட்டமொன்றில் உரையாற்றுகையிலயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,,

நபிகள் நாயகத்திற்கோ புனித அல்குர்ஆனையோ அபகீர்த்தி செய்வதை நாங்கள் அங்கீகரிக்காத போதிலும் இஸ்லாத்தின் பேரில் எல்லையில்லாமல் செய்துகொண்டு போகும் வன்செயல்களுக்கு இடமளிக்க கூடாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த கலாசாரத்தை பாதுகாத்தால் ஏனைய மதங்களும் பொறுமையையும், மன்னிக்கும் குணத்தையும் மேம்படுத்தலாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன், மிதவாத முஸ்லிம்கள் இதனை புரிந்துகொள்ளாவிட்டால் இலங்கை தலிபான்களின் போக்குக்கு கீழ்படியும் நிலையேற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி : நவமணி / யாழ் முஸ்லிம்

Post a Comment

Previous Post Next Post