மட்டக்களப்பு காத்தான்குடி வங்காள விரிகுடா கடற்கரையில் இன்று18-10-2012 வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் பல வகையான சிறிய ‘பெரிய மீன்களும் ஒரு பெரிய ரக ஆமையொன்றும் உயிரற்ற நிலையில் கரையொதுங்கியுள்ளன.
இதேவேளை நேற்று காலை தொடக்கம் பெருமளவிளான மீன்கள் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.
இதனை பார்வையிட நேற்றும் இன்றும் பெருமளவிளான பொது மக்கள் சாரி சாரியாக வந்த வண்ணம் உள்ளனர்.
அதே நேரம் நேற்றும் இன்றும் அதிகளவான மீன் இனங்கள் மற்றும் பல கடல் வாழ் உயிரினங்கள் கரையொதுங்கியதால் ஏதோ நடைபெற போகின்றது என்ற அச்சத்தில் மக்கள் உள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.





