Bluetooth உதவியுடன் செயல்படும் Tooth Brush-ஷை அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது. குழந்தைகளை பல் தேய்க்க வைப்பது, ஒழுங்காக பல் தேய்க்க வைப்பது தாய்மார்கள் அனுபவிக்கும் அன்றாட கொடுமைகளில் ஒன்று.
சில சோம்பேறி பெரியவர்களும் இந்த ரகத்தினர் தான். ஒப்புக்கு பல் தேய்த்துவிட்டு வந்துவிடுவார்கள்.
இதுபோன்ற அவதிகளை தடுக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த பீம் டெக்னாலஜீஸ் நிறுவனம் Digital Brush-ஷை அறிமுகப்படுத்தியுள்ளது.
Smartphone-னின் Bluetooth உதவியுடன் இது செயல்படும். Smartphone-ல் அலாரம் செட் செய்தால், பல் துலக்க தினமும் நினைவூட்டும்.
அது மட்டுமின்றி Bio-Electric முறையில் பற்களுடன் பிரஷ் நன்றாக, போதிய அளவில் உராய்ந்ததா அதாவது, நீங்கள் ஒழுங்காக பல் தேய்த்தீர்களா என்பது கண்காணிக்கப்பட்டு, அந்த தகவலும் Smartphone-க்கு அனுப்பப்படும்.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் அளவுடன் இது ஒத்துப்போனால், ‘Well done Boss’ என்று Message வரும். இந்த Brush அடுத்த மாதம் சந்தைக்கு வரவிருக்கிறது.
Tags
தொழில்நுட்பம்

