வருடத்தின் சிறந்த ஸ்மார்ட் போனுக்கான விருதுதை கெலக்ஸி S3 சுவீகரித்துகொண்டது...


லண்டனில் நடைபெற்ற 12 ஆவது வருடாந்த மொபைல் சொய்ஸ் விருது வழங்கும்  நிகழ்வில் செம்சுங் நிறுவனத்தின் கெலக்ஸி S3  இவ்வருடத்தின் சிறந்த ஸ்மார்ட் போனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.


கெலக்ஸி S3  ‘Best media phone’ மற்றும் ‘Phone of the year’ ஆகிய இரு விருதுகளையும், கெலக்ஸி நோட் ‘Most innovative device’ விருதினையும், செம்சுங் ‘Manufacturer of the year’ என்ற விருதினையும் பெற்றுக்கொண்டது.

இவ்விழாவில் HTC  நிறுவனத்தின் HTC One X ஸ்மார்ட்போனானது இரண்டு இடத்தினைப் பெற்றுக் கொண்டது.

HTC ‘Best video phone’ மற்றும் ‘Best social networking phone’ ஆகிய விருதுகளை வென்றது.
 
நொக்கியாவின் Pureview 808 "Best Camera Phone" விருதினைப் பெற்றுக்கொண்டது.  இது 41 மெகாபிக்ஸல் கெமராவினைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


இதேவேளை நொக்கியாவின் Nokia 800 ஆனது "Best Smartphone Design" விருதினை வென்றது.

 
சொனியின்  Xperia U ' Best Value Phone' விருதினையும் அப்பிளின் புதிய ஐ பேட் "Tablet Of The Year" விருதினை வெற்றி கொண்டது.

இவ்வருடத்திற்கான விருதுகளில் செம்சுங்கின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
 
செம்சுங்கின் கெலக்ஸி S3 ஆனது விற்பனையில் சாதனை படைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post