முஸ்லிம் குழுவினருக்கிடையில் மோதல் - புதிய பள்ளிவாசல் அடித்து உடைப்பு - 10 பேர் வைத்தியசாலையில்



(JM) ரிதிகம பிரதேச பொலிஸ் பிரிவில் தெலும்கொல்ல பிரதேசத்தில்  இன்று வெள்ளிக்கிழமை ஒரு மணி அளவில் புதிய பள்ளி என்ற பெயரில் ஆரம்பித்து தொழுகை நடத்தி வந்த அணியினரை  சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் பள்ளியினை அடித்து உடைத்துள்ளதுடன் அங்கிருந்த நபர்களைத் தாக்கியுள்ளதால் 10 பேர் அளவில்  காயத்திற்குள்ளாகி குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் மற்று ரிதிகம மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரிதிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பழைமைவாயந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் முரண்பட்டுக்  கொண்டு பிரிந்த சென்ற அணியினர் புதிய ஜும்ஆப் பள்ளிவாசலை ஆரம்பித்ததுடன் நீதி மன்றத்தில் இரு சாராருக்கிடையே இது குறித்த வழக்குத் தொடரப்பட்டது.  நீதி மன்றம் புதிய பள்ளிவாசலைச் சார்ந்த குழுவினருக்கு தொழுகையை மேற் கொள்ளுமாறு  தீர்ப்பு வழங்கினர் இதனை அடுத்து புதிய பள்ளியில் இந்த அணியினர் தொழுகையை மேற் கொண்டவந்தனர் எனவும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை ரிதிகம பொலிஸார் மேற் கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.


1 Comments

  1. இந்த எருமை மாடுகள் தான் தற்பபோதுள்ள பிரச்சினைகளுக்கு காரனமே புதிய பள்ளி கட்டுவது ஒருபுறம் அதை உடைப்பது மறுபுறம் பள்ளி உடைப்பதை குப்பாருக்கு பழக்கியதே இவனுகள்தான் பள்ளி உடைக்கப் போன எருமை மாடுகளில் ஐந்து நேரமும் தொழுவது எத்தனை பேர் என்று பார்த்தால் புரியும் இன்று நாட்டில் நடப்பது என்ன என்றே தெரியாத சோத்து மாடுகள்

    ReplyDelete
Previous Post Next Post