மியன்மாரில் பாரிய நிலநடுக்கம்- 12 சடலங்கள் மீட்பு, நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம்

மியன்மாரில் இன்று 11-11-2012 காலை 7.40 மணியளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்துள்ளதாகவும் இக்கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த இந்த பூமியதிர்ச்சி ரிக்;டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.  கட்டிட இடிபாடுகளுக்குள் மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இறந்தவர்களின் தொகை மேலும் அதிகரிக்கலாம் என மியன்மார் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மியன்மாரில் மண்டலே பகுதியின் வடக்கிலேயே இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மியன்மாரில் ஏற்பட்ட இந்த பூமியதிர்ச்சி அருகில் உள்ள நாடான தாய்லாந்தின் தலைநகரமான பாங்கொக்கிலும் உணரப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post