சிறைச்சாலையில் பதற்றம்:16 பேர் பலி, 43 பேர் காயம், கைதிகள் சிலர் தப்பியோட்டம்


கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர மோதலில் 16பேர் பலியாகியுள்ளதோடு 43 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். மேலும் சிறைச்சாலையின் பின்னாள் உள்ள மதில்களை உடைத்து கைதிகள் சிலர் தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் 10 படையினரும், சிறைச்சாலை காவலாளி ஒருவரும் தைதிகள் இருவரும் காயமடைந்துள்ளதோடு, இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமை தற்பொழுது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.




Post a Comment

Previous Post Next Post