(அப்துல் வதூத்)
காத்தான்குடி கிழக்கிழங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பினால் நடாத்தப்படும் ஸாஹிறா விஷேட பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி – 2012 இன்று 2ம் நாள் நிகழ்வு நேற்று அமைப்பின் கௌரவ தலைவர் அல்ஹாஜ் எம்.எஜ்.ஏ.பஷீர் ஜே.பி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. நேற்றையா காண்காட்சி நிகழ்வை கௌரவ அதிதிகளான ஹாஜியானி எஸ்.ஏ.நஸீறா SLEAS (பிரதிக் கல்விப் பணிப்பாளர், மட்டக்களப்பு மத்தி வலயம்) அவர்களும், அல்ஹாஜ் எஸ்.எம்.எம்.சுபைர் BA (கோட்டக் கல்விப் பணிப்பாளர் காத்தான்குடி கோட்டம்) அவர்களும், ஜனாபா கே.எம்.ஜெமீலுன் நிஸா (உதவிக்கல்விப் பணிப்பாளர், முன்பள்ளி, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்) ஆகியோர் திறந்துவைத்தார்கள். மேலும் மட்/அல் ஹிறா மகா வித்தியாளய அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார் B.Sc (B.Ad) Dip in Edu. அவர்களும் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். நேற்றும் காண்காட்சியை பார்வையிட பெருமளவிளான மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
இதன் பின் மீண்டும் நேற்று பி.ப.3மணிக்கு ஆரம்பமான காண்காட்சி நிகழ்வையும், காத்தான்குடி இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் இணையத்தளத்தையும் அல்ஹாஜ் யு.எல்.எம்.ஜெய்னுதீன் SLAS (வலயக் கல்விப்பணிபாளர், மட்டக்களப்பு மத்தி வலயம்) ஆரம்பித்து வைத்தார்கள்.