கடும் மழை: நாடு முழுவதிலும் பாதிக்கப்பட்டோர் 68,000இற்கும் அதிகம், புத்தளத்தில் 200 வீடுகளிற்கு சேதம்..


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் 68,000இத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  சீரற்ற காலநிலை காரணமாக வெவ்வேறுபட்ட விபத்துகளிற்கு முகங் கொடுத்து மூன்று உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்தார். 

மழை, பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் வீடுகள் பல சேதமாகியுள்ளதுடன்  வீதிகளின் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்புக்களும் எற்பட்டுள்ளன. 

இதே வேலை புத்தளம், உடப்பு பிரதேசத்தில் மழை காரணமாக 200 வீடுகள் சேதமாகியுள்ளன.  இதன் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் உடப்பு பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post