தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாம்புளுவையில் வெள்ள நிலைமை காணப்படுகிறது.
நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் நம்புளுவா பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதுடன் பிரதான வீதியிற்கு அருகாமயில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் சீர்குலைந்துள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார்.
