சிரச தெலைக்காட்சி நடாத்திய பொட்டண்ட புழுவன் இறுதிப் போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்ற புத்தளம் ஆமினா ரஹ்மத்துக்கு பாடசாலைகளில் வரவேற்பும் , கௌரவிப்பு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டன.
முதல் கெளரவிப்பு நிகழ்வு புத்தளம் அஸன்குத்தூஸ் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் எம். ஐ. ஏ. ரவூப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை சார்பாக நினைவுச் சின்னம் வழங்கி ஆமினா ரஹ்மத் கௌரவிக்கப்பட்டார்.
இரண்டாவது கெளரவிப்பு நிகழ்வு ஆமினா ரஹ்மத் (தரம் 3 ) கற்கும் புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மி தலைமையில் நடைபெற்றது. ஸாஹிரா பாடசாலை சார்பாக ஆமினா ரஹ்மத்துக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு பாடசாலை மாணவர்களும் பரிசில்களை வழங்கி வைத்தனர்.





