கம்பளை ஜினராஜ மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 1000பேர் திடீர் சுகயீனம் காரணமாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடல் அரிப்பு மற்றும் மயக்கம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தெள்ளுப் பூச்சு தாக்குதலின் காரணமாகவே இவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சம்பவத்தை அடுத்து பாடசாலையின் கல்வி நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
