சமயங்களிற்கு அவதூறு ஏற்படும் வகையில் செயற்பட்ட பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர உதவி பிரிவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த முறைப்பாடுகளின் படி பேஸ்புக் நிறுவனத்திற்கு தகவல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமயங்களிற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட பேஸ்புக் கணக்குகள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.
இதன்போது போலிக் கணக்குகளை முடக்குவது குறித்தும் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பேஸ்புக் போலிக் கணக்குகள் குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக தகவல் வழங்குமாறு பேஸ்புக் பயன்படுத்துபவர்களை இலங்கை கணினி அவசர உதவி பிரிவு கோரியுள்ளது.
இவ்வருடம் மட்டும் பேஸ்புக் தொடர்பான 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி: அததெரன
