பொலனறுவை – மனம்பிட்டிய பகுதியில் இன்று மழையுடன் சிவப்பு நிற திரவம் ஒன்றும் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேற்றைய தினம் மொனராகலை – செவனகலை பகுதியில் மழையுடன் இவ்வாறான சிவப்பு நிற திரவம் கசிந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் பொலனறுவை மனம்பிட்டிய பகுதியில் இந்த சிவப்பு நிறத்தினால் மழை காணப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜெயசேகர வினவியபோது:
சாதாரணமாக மீன்மழை ஏற்படுவதைப் போல, மேகத்துக்கு நீர் உறிஞ்சப்படும் போது, சில நிற திரவியங்களும் கலந்து உறிஞ்சப்படுவதால் இவ்வாறான மழை வீழ்ச்சி ஏற்படலாம் என்றும் தெரிவித்தார். எனினும் இதனை தாண்டி புதிதாக வேறேதும் காரணங்கள் உள்ளதா? என்பது தொடர்பில் மழைவீழ்ச்சி குறித்து முழுமையான பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னரே மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே இவ்வாறான பல வர்ணங்களிலான மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
