கொழும்பில் இடம்பெற்ற இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.


பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நேற்று  கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம் பெற்றது.

ஜூம்ஆ தொழுகையினையடுத்து தெவட்ட கஹா பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பமான பேரணி,சுற்றுவட்டம் வரை சென்றது.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.இஸ்ரேலே தாக்குதலை நிறுத்து,ஜக்கிய நாடுகள் சபையே ஏன் மௌனம்,அமெரிக்காவே அப்பாவி பலஸ்தீனர்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலுக்க எதிராக என்ன நடவடிக்கையெடுக்கப் போகின்றாய் போன்ற கோஷளை எழுப்பினர்.

பலஸ்தீன நட்பறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இ்நத ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹன்துன்னெத்தி,மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ,ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் உட்பட பலரும் கலந்து கெண்டனர்.



நன்றி: நன்றி: வீரகேசரி 

Post a Comment

Previous Post Next Post