ஹலால் சான்றிதல் குறித்து பௌத்த அமைப்புக்கள் வெளிப்படுத்தியு பிரதிபலிப்பு குறித்து ஆராய்வதற்காக சிலிங்கா முஸ்லிம் கவுன்சில் அவசரமாக கூடவிருப்பதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.
இனவாத பௌத்த அமைப்புக்கள் சில முஸ்லிம்களுக்கு எதிராகவும், இஸ்லாத்திற்கு எதிராகவும் தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. சாதாரண அப்பாவி மக்களிடத்தில் இனவாத பௌத்த அமைப்புக்களின் பிரச்சாரம் வெற்றியளிக்கும் பட்சத்தில் அது முஸ்லிம் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்நிலையில் தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலைமையை ஆராய்வதற்காக முஸ்லிம் கவுன்சில் அவசரமாக கூடவுள்ளது. ஹலால் சான்றிதழுக்கு எதிராக பௌத்த பலசேனா அமைப்பு சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து முஸ்லிம் கவுன்சில் விவாதிக்கவுள்ளது. இந்த போலி பிரச்சாரங்களை அணுகவேண்டிய முறை குறித்து நாங்கள் ஆராயந்துவருகிறோம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பௌத்த அமைப்புக்களை சந்தித்து தெளிவுபடுத்துவது குறித்தும் ஆராய்ந்து வருகிறோமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
