இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் -சர்மிளா செய்யத்


இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் என்று தென்பகுதி மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறார்.

அத்துடன் தேவைப்படின் பாலியல் தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இப்படியாக பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்கின்ற கருத்தை சமூக ஆய்வாளரான, சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சர்மிளா செய்யத் ஏற்றுக்கொள்கிறார்.

இலங்கை ஒரு பாரம்பரிய கலாச்சாரங்களை பின்பற்றுகின்ற நாடு என்கின்ற போதிலும், அங்கு ஏற்கனவே பாலியல் தொழில் மிகவும் அதிகமான அளவுக்கு பரந்திருப்பதால், அதனை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறைக்கு நல்லது என்றும் அதனால், அதில் ஈடுபடும் பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்பும் கிடைக்கும் என்றும் சர்மிளா கூறுகிறார்.

ஏற்கனவே, பல கிராமிய மற்றும் சிறிய பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், இப்படியாக அந்த தொழில் சட்டபூர்வமாக்கப்படுவது, அவர்களுக்கு சிறிதளவாவது பாதுகாப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.

இருந்தபோதிலும், இந்தத் தொழில் சட்டபூர்வமாக்கப்படுவதால், அந்த தொழிலில் ஈடுபடும் தரகர்களே அதிக பலனைப் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

நன்றி :BBC 

அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

Post a Comment

Previous Post Next Post