ஸர்மிளாவின் கருத்துக்கு எம்.எஸ்.எம். அஷ்ரப் பலத்த கண்டனம்


ஏறாவூர் ஸர்மிளா ஸெய்யித் ஒரு இஸ்லாமிய பெண்ணாக இருந்து கொண்டு இஸ்லாத்துக்கு முற்றிலும் மாற்றமான  கருத்தினை பகிரங்கமாக வெளியிட்டு இஸ்லாத்தை அவமானப்படுத்தியுள்ளார் இவரின் கருத்துக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் என அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம் . அஷ்ரப் திஹாரிய நியூஸ் இணையத்திற்கு தெரிவித்தார்.

இஸ்லாம் மிகவும் தெளிவான  மார்க்கம் இதில் விபச்சாரம் ஹராம். இதை சட்டமாக்குவதற்கு ஆதரவு தெரிவித்து ஒரு இஸ்லாமிய பெண் கருத்து கூறுவதானது  முஸ்லிம்களின் உள்ளங்களை புண்படுத்தியுள்ளதுடன், இஸ்லாத்தை இழிவுபடுத்துவதாகவே அமையும். எனவே ஸர்மிளாவின் கருத்து தொடர்பில் எனது கண்டனங்களை தெரிவித்தக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post