இஸ்ரேல் நோக்கி மூன்று அமெரிக்க போர் கப்பல்கள் விரைவு...


அமெரிக்காவின் 3 கடற்படை போர்க் கப்பல்கள் இஸ்ரேலை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் நாட்டிற்கும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்திற்கும்  இடையே தீவிர சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேர விரும்பினால் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் அந்த கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. யுத்த நோக்கத்திற்காக அனுப்பவில்லை என்றும் அது கூறியுள்ளது.

சுமார் 2,500 படையினருடன்  இக்கப்பல் இஸ்ரேலை நோக்கி புறப்பட்டுள்ளது. ஈரானில் பாலிஸ்டிக் வகை ஏவுகணை தாக்குதலை முறியடிப்பதற்காக இஸ்ரேல் கடற்கரையில் ஏற்கனவே அமெரிக்காவின் 4 போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Previous Post Next Post