பாதிக்கப்பட்ட எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி - கஹடோவிட, ஓகொட பிரதேச மக்கள் -படங்கள்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  கஹடோவிட, ஓகொட பிரதேசங்களில் உள்ள சுமார் 50 குடும்பங்களுக்கு நேற்று பகல் வேலைக்கான சமைத்த உணவுகளை ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர்களான ஜனாப் M .H .M . அஷ்ரப் மற்றும் நஜீப் டீன் ஆகியோரின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.



இதேவேளை முஹ்டீன் ஜும்மாப் பள்ளிவாசளினால் இரவு உணவு வழங்கப்பட்டது. அத்துடன் மஸ்ஜிதுல் ஜாமி தௌஹீத் பள்ளிவாசளினால் இன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைந்த உணவுகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இதே வேலை நேற்று மாலை எமது திஹாரிய நியூஸ் இணையத்தளத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்ட கஹடோவிட, ஓகொட, உடுகொட மக்கள் நேற்று பகல் வேலைக்கான சமைத்த உணவுகளை வழங்கிய அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர்களான ஜனாப் M .H .M . அஷ்ரப் மற்றும் நஜீப் டீன் ஆகியோரிற்கு தங்களின் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொண்டார்கள். 





நேற்று வெள்ளத்தில் மூழ்கி இருந்த  கஹடோவிட, ஓகொட பிரதேசங்களின் இன்று காலை வெள்ளம் சற்று  குறைவடைந்துள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார். 

Post a Comment

Previous Post Next Post