இலங்கையின் முதலாவது செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது.. - படங்கள்


இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான (செற்றலைட்) 'சுப்றீம்செற்', இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.43 மணிக்கு விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்படது. 

சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்தே இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதாக சுப்றீம்செட் நிறுவனம் அறிவித்தது. 

கடந்த 22ஆம் திகதி ஏவப்படவிருந்த மேற்படி செயற்கைக்கோள், சீனாவின் காலநிலை சீரின்மை மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி காரணமாக ஐந்து நாட்களுக்கு பிற்போடப்பட்டிருந்தது.

இந்த செயற்கைக்கோளை விண்ணிற்கு ஏவியதன் மூலம் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணிற்கு ஏவிய ஆசியாவின் மூன்றாவது நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது.








Post a Comment

Previous Post Next Post