விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்க மாட்டோம் – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு


கமல்ஹாஸனின் நடிப்பில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாகவும், இஸ்லாமியர்கள் பற்றிய தவறான எண்ணங்களை மக்கள் மத்தியில் விதைப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தொடர்ச்சியாக முஸ்லிம்கள் தொடர்பான தவறான எண்ணங்களை சினிமாக்களினூடாக பரப்புவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அகிம்சையையும், நல்லொழுக்கத்தையும் போதிக்கும் தூய்மையான மார்க்கத்தை சினிமாக்கள் மூலம் கொச்சைப் படுத்துவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் எங்கும் திரையிடப்படக் கூடாது. மீறி திரையிட்டால் குறிப்பிட் திரையறங்குளை முற்றுகையிட்டு மபெரும் முற்றுகைப் போராட்டத்தை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் முன்னெடுக்கும். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளிலும் ஜமாத் தொடர்ந்து ஈடுபடும் என்பதை அறிவித்துக் 


விஸ்வரூபம் திரைப்படத்தின் போஸ்டர்களில் இருக்கும் "விஸ்வரூபம் " என்ற திரைப்படத்தின் பெயரின்  எழுத்துக்கள் கூட அறபு எழுத்தை ஒத்ததாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post