"துப்பாக்கி" திரைப்படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்.


நடிகர் விஜய் நடித்து தீபாவளி யன்று வெளியிடப்பட்ட துப்பாக்கி திரைப்படத்தில் முஸ்லிம் விரோதக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன .

துப்பாக்கி படத்தின் சர்ச்சையான காட்சிகளுக்கு எதிராக நடிகர் விஜய் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடவும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றன. சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்குமாறு தேசியலீக் கோரிக்கை விடுத்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி  நடிகர் விஜய்யின் தந்தை எஸ். ஏ சந்திரசேகரைத் தொடர்பு கொண்டு தமது அமைப்பு சார்பாக கடும்கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன், அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்கிவிடவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு சமூகத்தைப் புண்படுத்துவதைத் தாம் விரும்பவில்லை என்றும் அக்காட்சிகள் நீக்கப்படும் என்றும் திருத்தங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் எஸ். ஏ சந்திரசேகரன் உறுதியளித்துள்ளதாக மமக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது

Post a Comment

Previous Post Next Post