நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான 'துப்பாக்கி' திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் அமைந்திருப்பதாகக் கூறி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் (15.11.2012) வியாழன் அன்று தமுமுக உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகள் அடங்கிய முஸ்லிம் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் "சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும், நடிகர் விஜய் தரப்பில் எழுத்துமூலமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இதைச் செய்யத் தவறினால் போராட்டங்களை நடத்துவது" என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தமுமுக பொதுச் செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட பத்து பேர் கொண்ட குழு துப்பாக்கிப் படக் குழுவினரை சந்தித்து தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். அப்போது படக் குழுவினர், " இப்படம் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கவில்லை" என்று கூறி மன்னிப்புக் கோரியது மட்டுமல்லாமல் எழுத்துமூலமாக மன்னிப்புக் கடிதம் வழங்குவதாகவும் தெரிவித்தது. படத்தில் முஸ்லிம்களைப் புண்படுத்தும் காட்சிகளை நீக்குவதாகவும் உறுதி அளித்தது.
Tags
உலகச் செய்திகள்
.jpg)