காஸாவை பூண்டோடு அழியுங்கள் : விஷம் கக்கும் ஏரியல் ஷேரோன் மகன்


பலஸ்தீன காஸாவில்  ஹமாஸின் ஆயுத படை பிரிவு தலைவரை இஸ்ரேல் கொன்றதை தொடர்ந்து இஸ்ரேல் குண்டு வீச்சால் காசாவில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பலஸ்தீனர்கள் இறந்துள்ளனர்.

இரு தரப்புக்கும் மத்தியில் சமாதானத்துக்காக எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகள் முயலும் சூழலில், இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷேரோனின் மகனும் தற்போதைய இஸ்ரேல் ராணுவத்தில் மேஜராக இருப்பவருமான கிலாட் ஷேரோன் ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகையில் பலஸ்தீனர்களுக்கு எதிராக கட்டுரை வெளியிட்டுள்ளார்.

கிலாட் ஷேரோன் அக்கட்டுரையில் " ஹமாஸை தேர்ந்தெடுத்த காஸா மக்கள் அப்பாவிகள் அல்ல, அவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். ஹிரோஷிமாவை துவம்சம் செய்த பிறகும் ஜப்பான் பணியவில்லை. எனவே அமெரிக்கா நாகசாகி மேலும் அணுகுண்டை வீசியது. காஸாவில் மின்சாரம், கேஸ், வாகனங்கள் என எல்லாவற்றையும் அழித்தொழியுங்கள். தானாகவே காஸா போரை நிறுத்தும்" என விஷம் கக்கியுள்ளார்.

"அரசு இதை செய்ய தயாராக இல்லையென்றால் ஒட்டு மொத்த பலஸ்தீனத்தையும் அரசு கைப்பற்ற வேண்டும். இப்பிரச்னை அவ்வப்போது மீண்டும் நம்மை தொல்லைபடுத்தாமல் ஓரேயடியாக தீர்த்து கட்ட வேண்டும்" என்றும் கிலாட் ஷேரோன் எழுதியுள்ளார். கிலாட் ஷேரோனுக்கும் இதை வெளியிட்ட ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகைக்கும் பலர் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நன்றி : தூது 

Post a Comment

Previous Post Next Post