இலங்கையில் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை காத்தான்குடியில் அமைக்கப்படவுள்ளது. பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் அமையப்பெறவுள்ள இஸ்லாமிய நூதனசாலைக்கட்டிடம் ஒரு கோடி ரூபா செலவில் நிர்மானிக்கப்படவுள்ளது.
இந்த இஸ்லாமிய நூதனசாலை கட்டிடத்திற்கான நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம் பெற்று வருகின்றன. இந்த கட்டிட நிர்மான வேலைகளை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ஆகியோர் நேற்று (3.11.2012) சென்று பார்வையிட்டனர்.
இந்த இஸ்லாமிய நூதனசாலை கட்டிட நிர்மான வேலைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா இதன் போது ஆலோசனை வழங்கினார்.
இந்த இஸ்லாமிய நூதனசாலையில் வைப்பதற்காக 1920ம் ஆண்டு காத்தான்குடி பிரதேசத்தில் இடம் பெற்ற திருமண நிகழ்வின் போது மணப்பெண் பாவித்த சாரி மற்றும் மணமகன் அணிந்த தொப்பி, பாத்திரம் என்பவற்றை பிரதியமைச்சரிடத்தில் ஓய்வு பெற்ற றஹீம் ஆசிரியர் என்பவர் வழங்கி வைத்தார்.
நன்றி-காத்தான்குடி இன்போ




