பாலியல் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் உல்லாசத்துறையை மேம்படுத்த முடியும். – "சிறகு முளைத்த பெண்" ஏறாவூர் ஸர்மிளா


பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமமாக்குவது நல்ல விடயமாகும் என சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் எழுத்தாளருமான ஏறாவூரைச்சேர்ந்த ஸர்மிளா செய்யித் இன்று (20.11.2012) பி.பி.சி.தமிலோசைக்கு வழங்கி பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியுமென தெண்பகுதி மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்னா என்பவர் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் இது தொடர்பாக பி.பி.சி.தமிலோசை மேற்படி ஸர்மிளாவை தொர்பு கொண்டு கேட்ட போதே ஸர்மிளா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேற்படி ஸர்மிளா தொடர்ந்து கூறுகையில் பாலியல் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் உல்லாசத்துறையை மேம்படுத்த முடியும்.

உல்லாச துறையை ஊக்குவிப்பதற்காக பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதென்பது நல்ல விடயமாக நான் பாக்கின்றேன். வேறு சில நாடுகளிலும் இந்த நடைமுறை இருக்கின்றது. பொதுவான அடிப்படையில் பாலியல் தொழிலை சட்ட பூர்வமாக்க அந்த மாகாண சபை கூறியுள்ள காரணங்கள் சரியானவை என நான் பார்க்கின்றேன்.

இலங்கை பாரம்பரிய கலாசார நாடு என்று கூறப்பட்டாலும் கூட இலங்கையில் பாலியல் தொழில் என்பது அதிகரித்து வருகின்றது. சட்ட பூர்வமாக்கமாலே பாலியல் தொழில் அதிகரித்துள்ளது.


பாலியல் தொழிலை சட்ட பூர்வமாக்கவதன் மூலம் அது எந்தவொரு பாதகத்தையும் ஏற்படுத்தாது அது பாதுகாப்பை ஏற்படுத்தும் என்று நான் கருதுகின்றேன். இலங்கையில் சுனாமிக்குப்பின்னரான காலப்பகுதியில் இந்த பாலியல் தொழில் என்பது அதிகரித்து காணப்படுகின்றது.

நாட்டில் தற்போது நடைபெறும் அபிவிருத்தியினால் வெளிநாட்டு பிரஜைகளின் வருகை இவைகளின் மூலமும் இந்த பாலியல் தொழில் என்பது அதிகரித்து வருகின்றது என்று மேற்படி ஸர்மிளா செய்யித் தெரிவித்துள்ளார்.

மேற்படி ஸர்மிளா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் "சிறகு முளைத்த பெண்" கவிதை நூல் அறிமுகம் எனும் நூல் ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: காத்தான்குடி இன்போ

1 Comments

  1. ORU MUSLIMA IRUNTHU IPPIDI SOLLE EPPIDI ONGELALE MUDINTHETHU SISTER?
    VIFECHAAREM ENBATHU ENNE ENDRU TERUMA?????????????

    ReplyDelete
Previous Post Next Post