நளீம் ஹாஜியாரின் பெயர் சூட்டப்பட்ட உலகின் பெறுமதிமிக்க மாணிக்கக் கல்.


உலகின் பெறுமதிமிக்க மாணிக்கக் கல் ஒன்றுக்கு நளீம் ஹாஜியாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒனிக்ஸ் அன்லிமிடட் இன்டர்நெஷனல் எனும் மாணிக்கக்கல் சந்தைப்படுத்தல் நிறுவனமே இலங்கையின் புகழ் பெற்ற மாணிக்கக்கல் வியாபாரியும் ஜாமிஆ நளீமியாவின் ஸ்தாபகத் தந்தையுமாகிய நளீம் ஹாஜியாரின் பெயரைச் சூட்டியுள்ளது. 

ரூபி, சபயர், எமரல்ட் போன்ற உலகின் பெறுமதிமிக்க மாணிக்க வகைகளையும் விடவும் மதிப்புமிக்கதாக விளங்கும் அலெக்ஸான்ட்ரைட் வகை மாணிக்கக்கல் ஒன்றுக்கே 'நளீம் அலெக்ஸான்ட்ரைட்'  எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ஒனிக்ஸ் அன்லிமிடட் இன்டர்நெஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நளீம் ஹாஜியார் அவர்களால் இரத்தினபுரி நகரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட குறித்த கல்லானது 2006 ஆம் ஆண்டு வரை அவரால் பாதுகாக்கப்பட்டதாகவும் பின்னர் பட்டைதீட்டப்பட்டு அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டிருந்ததாகவும் குறித்த கல் தற்போது பல கோடி ரூபாய்களுக்கு விலை மதிப்பைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல நிறங்கள் மாறக் கூடிய குறித்த கல்லானது 19ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட அலெக்ஸான்டர் வகையைச் சார்ந்தது எனவும் குறித்த நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. 

நளீம் அலெக்ஸான்ட்ரைட் மாணிக்கக்கல்லை கீழுள்ள படத்தில் காணலாம்

நன்றி: விடிவெள்ளி

Post a Comment

Previous Post Next Post