வெலிக்கடை கைதிகளுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெறுவதாகவும் இதனால் பலர் பலியாகியுள்ளதாகவும் 13பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் சிறைக்காவலர் ஒருவரும் கைதிகள் இருவரும் விசேட அதிரடிப்படையினர் 10பேரும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை சிறைச்சாலையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையுடன், அவ்வளாகத்தில் உள்ள ஆயுத களஞ்சியசாலையை உடைத்த கைதிகள், அங்கிருந்து துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலைக்குள் ஒரு பகுதி கைதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதனையடுத்து வெலிக்கடை பிரதேசத்தில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சிறைச்சாலை முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சிறைச்சாலைக்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பதற்கு அதிரடிப்படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் மேலும் பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
.jpg)
