திஹாரிக்கு பொது விளையாட்டு மைதானம்???

திஹாரிக்கு ஒரு பொது விளையாட்டு மைதானம்  பெற்றுக்கொள்வது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று  சற்று நேரத்திற்கு முன்பதாக  சென்றல் பிளேஸ் வயலருகில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலுக்கு  பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன  கலந்துகொண்டார்.
இதன் போது   திஹாரிய சென்றல்  பிளேசில்  உள்ள பல வருடங்களாக பாவிக்கப்படமால் இருக்கும் வயலை பொது விளையாட்டு மைதானமாக மாற்றித்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன அவர்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர்  குறித்த வயலின்  உரிமையாளரின்  அனுமதியுடன் திஹாரியில் உள்ள மொத்த வாக்களார், ஊரில் உள்ள பாடசாலைகள் உட்பட திஹாரியின் முழு விபரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை வழங்குமாறும், அதை  தான் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச அவர்களின் கவனத்திற்கு  கொண்டுவருவதாகவும் உறுதியளித்தார்.

Post a Comment

Previous Post Next Post