மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் ஆலோசனைக்கிணங்க மேல் மாகாண அரச பாடசலைகளில் நடைபெற்ற "சுபசன் நிம்தெர" பாடசாலை சிரமதான நிகழ்வு, இன்று திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்த சிரமதான நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உட்பட பாடசாலை நலன்விரும்பிகள் பலர் கலந்துகொண்டனர்.