அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமமொன்றில் எரிகல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குறணை, ரத்துகோதீகல என்ற கிராமத்திலேயே இன்று காலை 8 மணியளவில் இந்த எரிகல் விழுந்துள்ளது.
வானத்திலிருந்து வெளிச்சத்துடன் மர்மப் பொருளொன்று விழுவதை கண்ட பிரதேசவாசிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் எரிகல் கிடக்கின்ற பிரதேசத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்துள்ளதுடன் இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.
.jpg)