அல் அஸ்ஹர் பிரதான மண்டபத்தை கட்டியெழுப்ப புதிய குழு நியமனம்.

திஹாரிய அல்  அஸ்ஹர்  மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தை மீண்டும் கட்டியேழுப்புவது  தொடர்பான விஷேட  கூட்டம் அல்  அஸ்ஹர்  அதிபர் ஜனாப் தௌசீர்  தலைமையில் இன்று இரவு 8 மணியளவில் பாடசாலை கணனிக் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது பாடசாலையில் தற்பொழுது உள்ள பிரதான  குறைபாடான வகுப்புக்கள் பற்றாக்குறை தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது. தற்பொழுது விசேட விடுமுறையில் இருக்கும் மூன்று வகுப்புக்கள் உட்பட மொத்தம் 7 வகுப்புக்கள் குறைபாடாக உள்ளது.  ஆகவே  இக்குறையை முதலில் நிவர்த்தி செய்யும் பொருட்டு தற்காலிக வகுப்பறைகளை அமைக்க முடிவு எடுக்கப்பட்டதுடன் நிரந்தர கட்டிடங்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இவ்விரண்டு கட்டிடங்களையும்  நிர்மாணிக்க ஒரு புதிய குழு நியமிக்கப்பட்டது. அத்துடன்  தற்காலிக வகுப்பறைகளை அமைப்பதற்கான பணத்தினை திஹாரிய ஊர்மக்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகளிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு  முடிவெடுக்கப்பட்டது.


நியமிக்கப்பட்ட புதிய குழு : 
பெயர் : 
திஹாரிய கல்வி அபிவிருத்தி சங்கம் 
( THIHARIYA EDUCATION  DEVELOPMENT SOCIETY ) - TEDS 

தலைவர் :
M .H.M . நாசிக் (முன்னாள் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர்)

உப தலைவர் :
அல் ஹாஜ் - M.L.M பாகிர் (MFCD  ஒருங்கிணைப்பாளர்)

செயலாளர் :
M.R.M  ரஹீம்  (முன்னாள் பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர்)

உப செயலாளர் :
M .Z .M . அஸீம் (பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர்)

பொருளாளர் :
ஜனாப் M .K .M. பஸ்மில் (மக்கள் வங்கி )

உப பொருளாளர் :
M.H.M. அஸாரீர் 
(தாருஸ்ஸலாம் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்)

இணைப்பாளர் : 
M. நியாஸ் (Dr ) 

குழு உறுப்பினர்கள் :
SDC  மற்றும்  பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உட்பட இன்று கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் இக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

Post a Comment

Previous Post Next Post